சென்னையில் 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீர் ரத்து

சிங்கப்பூர் செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 6 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.;

Update:2025-06-18 12:49 IST

சென்னை,

குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப கோளாறால், மருத்துவ கல்லூரி மாணவர் விடுதி கட்டிடத்தின் மீது விழுந்து வெடித்து சிதறியதால் 241 பயணிகள் உள்பட 270-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆமதாபாத் விமான விபத்துக்குப் பின்பு, டாடா நிறுவனத்தின் பல்வேறு விமானங்களில் தொழில்நுட்ப கோளாறுகள் இருப்பதாக ரத்து செய்யப்பட்டு உள்ளதால், அந்த நிறுவனம் கடும் நெருக்கடியை சந்தித்து உள்ளது.

இந்த நிலையில், சென்னை - டெல்லி, டெல்லி - சென்னை 2 ஏர் இந்தியா பயணிகள் விமானங்கள், நிர்வாக காரணங்களால் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகளுக்கு அது குறித்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டு, அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. அதைப்போல் சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், இன்று 6 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 6 மணி நேரம் தாமதம் குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், சவுதி அரேபியாவின் தமாமிலிருந்து அதிகாலை 3.25 மணிக்கு சென்னைக்கு வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம்தான், அதிகாலை 5 மணிக்கு மீண்டும் சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு செல்லும்.

ஆனால் இன்று அந்த விமானம் சுமார் 6 மணி நேரம் தாமதமாக, காலை 9.25 மணிக்குதான் தமாமிலிருந்து சென்னைக்கு வந்தது. எனவே சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்ல வேண்டிய விமானமும் தாமதமாக புறப்பட்டுச் சென்றது என்று அதிகாரிகள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்