அரசு போக்குவரத்து கழக பணிமனையில் 25 ஆயிரம் லிட்டர் டீசல் திருட்டு - அதிர்ச்சி சம்பவம்

பணிமனை கிளை மேலாளர் உள்பட 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்;

Update:2025-06-06 18:54 IST

தமிழகத்தில் உள்ள 8 அரசு போக்குவரத்து கோட்டங்களில் திருநெல்வேலியும் ஒன்று. இந்த கோட்டத்தில் தாமிரபரணி கிளை அரசு போக்குவரத்து கழக பணிமனை திருநெல்வேலியில் உள்ளது. இந்த பணிமனையில் இருந்து 56 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், இந்த பணிமனையில் இருந்து 25 ஆயிரம் லிட்டர் டீசல் திருடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தாமிரபரணி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தினசரி அரசு பஸ்களுக்கு டீசல் நிரப்புவதில் முறைகேடு நடந்திருப்பது அம்பலம் ஆகியுள்ளது.

இது தொடர்பாக பணிமனை கிளை மேலாளர் கிருஷ்ணன் உள்பட 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்