திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் மாணவர்களுக்கு 3டி பிரிண்டிங் டெக்னாலஜி பயிற்சி பட்டறை
திருநெல்வேலி அறிவியல் மைய அலுவலர் குமார் தேசிய தொழில்நுட்ப தினத்தின் முக்கியத்துவம் மற்றும் பயிற்சி பட்டறை பற்றி மாணவர்களிடம் விளக்கி பேசினார்.;
திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில், தேசிய தொழில்நுட்ப தினத்தினை (National Technology Day) முன்னிட்டு இன்று (11.5.2025) காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை 3D Printing Technology என்ற தலைப்பில் 8ம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடித்த மாணவ- மாணவிகளுக்காக இலவச பயிற்சி பட்டறை நடைபெற்றது. இதில் 47 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இந்த பயிற்சி பட்டறையில் நாகர்கோவிலைச் சேர்ந்த அனிஸ் டேரல் என்பவர் 3டி கிரியேட்டிவ் பிரிண்டிங் குறித்து மாணவ மாணவிகளுக்கு பயிற்சியளித்தார். முன்னதாக திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தின் கல்வி அலுவலர் மாரிலெனின் வரவேற்று பேசினார். மாவட்ட அறிவியல் அலுவலர் குமார் தேசிய தொழில்நுட்ப தினத்தின் முக்கியத்துவம் மற்றும் பயிற்சி பட்டறை பற்றி மாணவ மாணவிகளிடம் விளக்கி பேசினார்.