மெக்கா பயணத்தின்போது விபத்தில் 42 இந்தியர்கள் பலி: விஜய் இரங்கல்
இந்தியர்கள் பலியான செய்தியறிந்து வேதனையடைந்ததாக விஜய் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
சவுதி அரேபியாவில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 42 இந்தியர்கள் உயிரிழந்தனர். அவர்களில் பலர் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து சென்றவர்கள் என்பதும், அனைவரும் சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் இருந்து மெதினா நோக்கி உம்ரா புனித பயணம் மேற்கொண்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இந்திய அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த விபத்து தொடர்பாக தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
”தெலுங்கானா மாநிலத்திலிருந்து சவுதி அரேபியாவின் மெக்காவிற்குப் புனிதப் பயணம் மேற்கொண்ட 42 பேர், மதீனா அருகே நிகழ்ந்த விபத்தில் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.