5 முக்கிய ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு - தெற்கு ரெயில்வே
தாம்பரம் - நாகர்கோவில் உள்ளிட்ட 5 ரெயிகளில் கூடுதல் பெட்டிகள் தற்காலிகமாக இணைக்கப்பட உள்ளது.;
சென்னை,
5 முக்கிய ரெயில்களில் பயணிகளின் வசதிக்காக கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
- தாம்பரம் - செங்கோட்டை (வண்டி எண்: 20681/20682) செல்லும் சிலம்பு அதிவேக எக்ஸ்பிரல் ரெயிலில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 1ம் தேதி முதல் ஏப்ரல் 29 வரையிலும், செங்கல்பட்டில் இருந்து நவம்பர் 2 முதல் ஏப்ரல் 30 வரையிலும் கூடுதல் பெட்டிகளுடன் ரெயில் இயக்கப்பட்டும்.
- தாம்பரம் - நாகர்கோவில் (வண்டி எண்: 22657/22658) செல்லும் எக்ஸ்பிரல் ரெயிலில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 2ம் தேதி முதல் ஏப்ரல் 29 வரையிலும், நாகர்கோவிலில் இருந்து நவம்பர் 3 முதல் ஏப்ரல் 30 வரையிலும் கூடுதல் பெட்டிகளுடன் ரெயில் இயக்கப்பட்டும்.
- சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் (வண்டி எண்: 12695/12696) செல்லும் எக்ஸ்பிரல் ரெயிலில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 3ம் தேதி முதல் ஏப்ரல் 29 வரையிலும், திருவனந்தபுரத்தில் இருந்து நவம்பர் 4 முதல் ஏப்ரல் 30 வரையிலும் கூடுதல் பெட்டிகளுடன் ரெயில் இயக்கப்பட்டும்.
- சென்னை சென்ட்ரல் - ஆலப்புழா (வண்டி எண்: 22639/22640) செல்லும் எக்ஸ்பிரல் ரெயிலில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 1ம் தேதி முதல் ஏப்ரல் 27 வரையிலும், ஆலப்புழாவில் இருந்து நவம்பர் 2 முதல் ஏப்ரல் 28 வரையிலும் கூடுதல் பெட்டிகளுடன் ரெயில் இயக்கப்பட்டும்.
- கோயம்புத்தூர் - ராமேஸ்வரம் (வண்டி எண்: 16618/16617) செல்லும் எக்ஸ்பிரல் ரெயிலில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 4ம் தேதி முதல் ஏப்ரல் 28 வரையிலும், ராமேஸ்வரத்தில் இருந்து நவம்பர் 5 முதல் ஏப்ரல் 29 வரையிலும் கூடுதல் பெட்டிகளுடன் ரெயில் இயக்கப்பட்டும்.
கூடுதல் பெட்டிகளின் அமைப்பு: 1 - ஏசி இரண்டாம் வகுப்பு பெட்டி, 2 - ஏசி மூன்றாம் வகுப்பு பெட்டி, 3 - ஸ்லீப்பர் வகுப்பு பெட்டி, 1 - பொது வகுப்பு பெட்டி