அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம்: விசாரணைக்கு காலக்கெடு தேவை; எடப்பாடி பழனிசாமி வழக்கு

அ.தி.மு.க. சின்னம் மற்றும் உட்கட்சி விவகாரம் தொடர்பாக ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்துள்ளார்.;

Update:2025-04-03 20:05 IST

கோப்புப்படம்

சென்னை,

அ.தி.மு.க. சின்னம் மற்றும் உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட புகார்களின் மீது ஆரம்பகட்ட விசாரணை நடத்தி முடிப்பதற்கு உரிய காலக்கெடுவை நிர்ணயிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக மனுவில், 2026 சட்டசபை தேர்தலுக்கு தயாராக வேண்டிய சூழல் உள்ளதால், உரிய காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்