அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை ஆஸ்பத்திரியில் அனுமதி

தொடர் பயணம் மற்றும் கட்சி கூட்டங்களில் பங்கேற்று வந்த தம்பிதுரைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.;

Update:2025-10-25 21:28 IST

சென்னை,

அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளராகவும், மாநிலங்களவை எம்.பி.யாகவும் பணியாற்றி வருபவர் தம்பிதுரை (வயது 78). இவர், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு கூட்டம் நடத்தி வந்தார். இந்த நிலையில் தொடர் பயணம் மற்றும் கட்சி கூட்டங்களில் பங்கேற்று வந்த தம்பிதுரைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனைதொடர்ந்து அவருடைய குடும்பத்தினர் அவரை சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நேற்று சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆஸ்பத்திரியில் தம்பிதுரை, மருத்துவ குழுவினரின் கண்காணிப்பில் இருந்து வருகிறார். தம்பிதுரை உடல்நிலை தொடர்பாக ஆஸ்பத்திரி நிர்வாகம் இதுவரை எந்தவித அதிகாரபூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்