அண்ணா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி அஞ்சலி
பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை ஒட்டி அவரது நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.;
சென்னை,
முன்னாள் தமிழ்நாடு முதல்-அமைச்சர் அண்ணாவின் 56ஆவது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு தி.மு.க. சார்பில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. பேரணியின் முடிவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மெரினாவில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, பொன்முடி, மா.சுப்பிரமணியன், திமுக எம்.பி. டி.ஆர் பாலு உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில், பேரறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, தலைமை கழகச் செயலாளர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள், கழக சார்பு அமைப்புகளின் மாநில துணை நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள் உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.