‘ஏவுகணை நாயகர்’ என்கிற பெருமை பெற்ற ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்தநாள்: நயினார் நாகேந்திரன் புகழாரம்

அப்துல் கலாம் கனவு கண்ட ‘வல்லரசு இந்தியா’உருவாக நாம் ஒவ்வொருவரும் உறுதி ஏற்போம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.;

Update:2025-10-15 11:29 IST

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர், ‘ஏவுகணை நாயகர்’ என்கிற பெருமை பெற்ற ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்தநாள் இன்று!

அறிவியல், கல்வி, தேச முன்னேற்றம், எதிர்காலக் கனவு போன்ற பல துறைகளில் பள்ளி மாணவர்களிடையே பேசியும் எழுதியும், அவர்களிடம் சிந்தனையை விதைத்த மாபெரும் கனவு நாயகன் அப்துல் கலாம்!

எப்போதும் மாணவர்களையும் இளைஞர்களையும் நம்பிக்கையுடன் முன்னேற்றத்தின் பாதையில் வழிநடத்தி, அவர்களிடம் கனவுகளை விதைத்து வந்தவர் அப்துல் கலாம்!

இன்றைய தினத்தில், அப்துல் கலாம் கனவு கண்ட ‘வல்லரசு இந்தியா’உருவாக நாம் ஒவ்வொருவரும் உறுதி ஏற்போம்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்