பயணிகள் கவனத்திற்கு...கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் நேரத்தில் மாற்றம்
கொல்லம் விரைவு ரயிலின் புறப்படும் நேரத்தை தெற்கு ரயில்வே மாற்றியமைத்துள்ளது.;
சென்னை,
கேரளாவின் கொல்லம் ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் வரை கொல்லம் எக்ஸ்பிரஸ் (16102) விரைவு ரயில் இயக்கப்படுகிறது. திருச்சி, மதுரை, தென்காசி வழியாக இந்த ரயில் கேரளாவிற்கு செல்கிறது. இதனால், இந்த ரயிலில் பயணிகள் கூட்டம் எப்போதும் அலைமோதுவதை பார்க்க முடியும். பண்டிகை நாட்கள் மட்டும் இன்றி சாதாரண நாட்களிலும் இந்த ரயிலில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிவதை பார்க்க முடியும்.
இந்த ரயில் கொல்லம் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 12 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு நள்ளிரவு 2.30 மணிக்கு வந்தடையும். இந்த நிலையில், ரயில் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.. இதன்படி, வரும் 1ஆம் தேதி முதல் கொல்லம் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும் என்றும், தாம்பரம் ரயில் நிலையத்தை காலை 7.30 மணிக்கு அடையும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.