மோசமான வானிலை; துபாய்-கொல்கத்தா விமானம் சென்னையில் தரையிறக்கம்

மோசமான வானிலை காரணமாக துபாய்-கொல்கத்தா விமானம் சென்னையில் தரையிறங்கியது.;

Update:2025-01-24 06:40 IST

சென்னை,

துபாய் விமான நிலையத்தில் இருந்து கொல்கத்தாவுக்கு 274 பயணிகளுடன் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு சென்றது. கொல்கத்தாவில் மோசமான வானிலை நிலவியதால் துபாய் விமானம் அங்கு தரை இறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்து கொண்டு இருந்தது.

இதையடுத்து விமானத்தை சென்னையில் தரை இறக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் 274 பயணிகளுடன் சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்து தரை இறங்கியது.

பயணிகள் அனைவரும் விமானத்திலேயே அமர வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான குடிநீர், சிற்றுண்டி வழங்கப்பட்டன. கொல்கத்தாவில் வானிலை சீரடைந்த பிறகு அந்த விமானம் சென்னையில் இருந்து கொல்கத்தா புறப்பட்டு சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்