'ஜனநாயகன்’ தணிக்கை விவகாரத்தில் பாஜவுக்கு தொடர்பு கிடையாது - தமிழிசை சவுந்தரராஜன்
தணிக்கை விவகாரத்தை திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் அரசியலாக்குவதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
ஜனநாயகன் தணிக்கை விவகாரத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசியதாவது;
”கலையையும், அரசியலையும் ஒன்றும் செய்யக்கூடாது என்று காங்கிரஸ்காரர்கள் கூறுகின்றனர். பல திரைப்படங்கள் தடை செய்யப்பட்டது காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்தான். திரைத்துறையினரை ஒடுக்கி அரசியல் செய்யக்கூடாது என திமுகவின் இளங்கோ பேசுகிறார். ஆனால் நீங்கள் ஒரு தியேட்டரைகூட கொடுக்கமாட்டீர்கள். இந்த விவகாரத்தில் பாஜகவிற்கும், பிரதமர் மோடிக்கும், சென்சார் சான்றிதழ்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்த விவகாரத்தை திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் அரசியலாக்குகின்றன."
இவ்வாறு அவர் பேசினார்.