புதிய அடிமைகள் கிடைக்குமா என பாஜக தேடுகிறது: உதயநிதி
எத்தனை அடிமைகள் வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.;
திண்டுக்கல்,
திண்டுக்கல் வேடசந்தூர் திமுக நிர்வாகி சுவாமிநாதன் இல்ல திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:“பாஜகவுக்கு அடிமையாக அதிமுக கிடைத்துள்ளது. புதிய அடிமைகள் கிடைக்குமா என பாஜக தேடுகிறது. பாஜகவுக்கு புதிய அடிமைகள் கிடைக்கட்டும்; எத்தனை அடிமைகள் வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது. கை நம்மை விட்டு எங்கும் போகாது. ‘எனது கையை’ சொன்னேன் வேறு எதையும் நினைக்காதீர்கள்,” என்று கூறினார்.
அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையலாம் என்றும், வலுவான கூட்டணி அமைய இருப்பதாக எடப்பாடி பழனிசாமி நேற்று தனது பிரசார கூட்டத்தில் பேசினார். அதிமுக பிரசார கூட்டத்தில் தமகா கொடியுடன் இளைஞர்கள் சிலர் கலந்து கொண்ட நிலையில், “கொடி பறக்குது... கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது,” என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருந்த நிலையில், உதயநிதி ஸ்டாலினின் இந்த விமர்சனம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.