சென்னையில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.;

Update:2025-10-15 11:38 IST

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. மத வழிபாட்டு தலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்களின் வீடுகளுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, தாய்லாந்து, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் தூதரகங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் மூலம் மிரட்டல் வந்தது. இதையடுத்து, போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு அதிகாரிகள் தூதரக அலுவலகங்களுக்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்