வரதட்சணை கேட்டு கொடூர தாக்குதல்; வீடியோ ஆதாரத்துடன் கணவர் குடும்பத்தார் மீது பெண் புகார்

அருண்குமாரின் குடும்பத்தினர் ஸ்ரீலஜாவை சாலைக்கு இழுத்து வந்து கொடூரமாக தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.;

Update:2025-10-01 13:29 IST

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாநிலம் ஓசூர் அருகே கர்நாடக எல்லைப் பகுதியில் அமைந்துள்ள உரிகம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீலஜா. இவருக்கும் கர்நாடக மாநிலம் ஆனேக்கல் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், அருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர், வரதட்சணை கேட்டு ஸ்ரீலஜாவை கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் ஸ்ரீலஜாவை அடித்து துன்புறுத்தியதாகவும், சாலைக்கு இழுத்து வந்து அவரை கொடூரமாக தாக்கியதாகவும் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வீடியோ ஆதாரத்துடன் தனது கணவர் அருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஆனேக்கல் காவல் நிலையத்தில் ஸ்ரீலஜா புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்