தமிழக பட்ஜெட் 2025-26 : கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும்- தங்கம் தென்னரசு

Update:2025-03-14 05:40 IST
Live Updates - Page 4
2025-03-14 04:00 GMT

தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் - சட்டப்பேரவைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட மூத்த அமைச்சர்கள் வருகை! 

2025-03-14 03:27 GMT

தமிழ்நாடு சட்டமன்ற வளாகத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வருகை

இபிஎஸ் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது

2025-03-14 03:21 GMT

எல்லார்க்கும் எல்லாம் என்ற தத்துவத்திற்கு செயல் வடிவம் தரும் வகையில் தமிழ்நாடு பட்ஜெட் இருக்கும் என்று அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்திய பிறகு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

2025-03-14 03:20 GMT

நாளை (சனிக்கிழமை) வேளாண் பட்ஜெட் வெளியாகிறது. இதை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார். அதனைத் தொடர்ந்து, 17-ந் தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதம் சட்டசபையில் நடைபெறும். தொடர்ந்து, துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற இருப்பதால், சட்டசபை கூட்டம் ஒரு மாதத்திற்கு மேல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2025-03-14 03:19 GMT

 முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று, "சமூகத்தின் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திட இந்த பட்ஜெட்" என்று சமூக வலைதளத்தில் தெரிவித்து இருப்பது, பட்ஜெட் மீதான ஆர்வத்தை இன்னும் அதிகரித்து இருக்கிறது. பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகள் நிச்சயம் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. அது என்னவென்பது இன்னும் சில நிமிடங்களில் தெரிந்துவிடும்.

2025-03-14 03:12 GMT

சென்னையில் பட்ஜெட் ஒளிபரப்பும் இடங்கள்...

சென்னை மாநகராட்சியை பொறுத்தமட்டில் சென்னை சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையம், கலெக்டர் அலுவலக வளாகம், ரிப்பன் மாளிகை, கோயம்பேடு, எழும்பூர், மாதவரம், தண்டையார்பேட்டை, விஜயநகர், கிண்டி, சுங்கச்சாவடி, திருவொற்றியூர் அஜேக்ஸ் பஸ் நிலையம், மெரினா, பெசன்ட்நகர், திருவான்மியூர், பாலவாக்கம், அக்கரை, நீலாங்கரை கடற்கரை, வள்ளுவர் கோட்டம், அண்ணா சதுக்கம்,

திருவொற்றியூர் வடிவுடை அம்மன் கோவில் சன்னதி தெரு, தேரடி மார்க்கெட், காலடிப்பேட்டை மார்க்கெட், திரு.வி.க.நகர் பெரியார் பூங்கா, முரசொலிமாறன் பூங்கா, மணலி புதுநகர், அண்ணாநகர் டவர் பூங்கா, கத்திப்பாரா பூங்கா, கொளத்தூர் எம்.எல்.ஏ. அலுவலகம் என 100 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

2025-03-14 03:08 GMT

பொதுமக்கள் உடனடியாக அறிந்து கொள்ளும் வகையில் தமிழக பட்ஜெட் அறிவிப்புகள் தமிழகம் முழுவதும் 936 இடங்களில் எல்.இ.டி. திரை மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

சென்னை மாநகராட்சியில் 100 இடங்களிலும், இதர மாநகராட்சி பகுதிகளில் 48 இடங்களிலும், நகராட்சி பகுதிகளில் 274 இடங்களிலும், பேரூராட்சிகளில் 425 இடங்களிலும் காலை 9.30 மணி முதல் பட்ஜெட் உரை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

2025-03-14 03:04 GMT

2025-26ம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்யவுள்ள நிலையில், மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் அமைச்சர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

2025-03-14 03:02 GMT

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. அன்றைய தினம் கவர்னர் ஆர்.என்.ரவி தனது உரையை புறக்கணித்து சென்றாலும், சபாநாயகர் மு.அப்பாவு தமிழில் வாசித்த கவர்னர் உரை அவைக் குறிப்பில் ஏற்றப்பட்டது.

தொடர்ந்து 11-ந் தேதி வரை கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பதில் உரையும் இடம்பெற்றது. அத்துடன் தேதி குறிப்பிடாமல் சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், 2025-26-ம் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் கூடுகிறது. காலை 9.30 மணிக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்படும் முழு பட்ஜெட் இதுதான் என்பதால், பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்