தாம்பரம் - செங்கல்பட்டு 4 வது ரெயில் வழித்தடத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் - நயினார் நாகேந்திரன் வரவேற்பு
தமிழகத்தின் உள்கட்டமைப்பை தொடர்ந்து மேம்படுத்தும் பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைத்து புறநகர் இரயில் இணைப்பை வலுப்படுத்தும் வகையில் ரூ.757.18 கோடி மதிப்பீட்டில் தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான 4-வது ரெயில் வழித்தடத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இப்புதிய தடத்தால், ஆண்டுக்கு 1.344 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டு, ரூ.157 கோடி கூடுதல் வருவாய் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு தொடர்ந்து தமிழகத்தின் ரெயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்தி வளர்ச்சிக்குத் தொடர்ந்து வித்திடும் நமது பாரதப் பிரதமர் மோடிக்கும், மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கும் தமிழக மக்கள் சார்பாக எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.