சென்னை சென்டிரல்-சத்தீஸ்கர் இடையிலான ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

பிலாஸ்பூரில் இருந்து சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் டோங்கர்கர் ரெயில் நிலையத்தில் நின்று வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-09-24 00:28 IST

கோப்புப்படம் 

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு பல்வேறு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சத்தீஸ்கர் மாநிலம் டோங்கர்கர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.

அதன்படி, சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து சென்னை சென்டிரல் வரும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12851) வருகிற 28-ந் தேதி முதல் டோங்கர்கர் ரெயில் நிலையத்தில் 2 நிமிடம் நின்று வரும்.

அதே போல, சென்னை சென்டிரலில் இருந்து பிலாஸ்பூர் செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12852) இன்று முதல் அடுத்த மாதம் 1-ந் தேதி வரை டோங்கர்கர் ரெயில் நிலையத்தில் 2 நிமிடம் நின்று செல்லும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்