சென்னை: பஸ்சில் பயணம் செய்த மூதாட்டியிடம் 14 சவரன் நகை திருட்டு - அதிர்ச்சி சம்பவம்

திருட்டு குறித்து நிரஞ்சனா தேவி சிட்லபாக்கம் போலீசில் புகார் அளித்தார்.;

Update:2025-06-18 09:17 IST

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த மூதாட்டி நிரஞ்சனா தேவி. இவர் இன்று குரோம்பேட்டையில் இருந்து அஸ்தினாபுரத்திற்கு மாநகர பஸ்சில் பயணம் செய்துள்ளார்.

அப்போது, நிரஞ்சனா தேவி கைப்பையில் இருந்த 14 சவரன் நகையை மர்ம நபர் திருட்டிச்சென்றுள்ளார். இந்த திருட்டு குறித்து நிரஞ்சனா தேவி சிட்லபாக்கம் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 14 சவரன் நகையை திருடிச்சென்ற திருடனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்