சென்னை: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.;

Update:2025-09-04 19:34 IST

சென்னை,

கடந்த 2022ம் ஆண்டு மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் வசித்து வந்த சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது தொடர்பாக, சிறுமியின் பெற்றோர் ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய 33 வயது வாலிபரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர்.

இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இவ்வழக்கில் தொடர்புடைய 33 வயதுடைய வாலிபரின் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவரை குற்றவாளி என தீர்ப்பளித்து, 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்