சென்னை: ரெயில் நிலையத்தில் நெஞ்சுவலியால் பயணி உயிரிழப்பு
ரெயில் நிலையத்தின் நுழைவு வாயில் வழியாக சென்றபோது திடீரென சுருண்டு விழுந்தார்.;
சென்னை,
சென்னை அய்யப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் நரேஷ்குமார் (வயது 45). இவர் நேற்று காலை திருப்பூர் செல்வதற்காக சென்டிரல் ரெயில் நிலையம் வந்தார். ரெயில் நிலையத்தின் நுழைவு வாயில் வழியாக சென்றபோது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர் சுருண்டு விழுந்தார்.
அங்கிருந்த சக பயணிகள் அவரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், நரேஷ்குமார் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சென்டிரல் ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.