சென்னை: கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி சுட்டுப்பிடிப்பு

கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி விஜயகுமார் போலீசாரால் சுட்டுப்பிடிக்கப்பட்டார்.;

Update:2025-11-22 07:39 IST

சென்னை,

நேற்று முன்தினம் சென்னை இந்திரா நகர் ரெயில் நிலையம் அருகே மவுலி என்ற நபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த ரவுடி விஜயகுமார், கவுதம், நிரஞ்சன் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக ரவுடி விஜயகுமாரை பிடிக்க முயன்றபோது போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயற்சித்தபோது, தற்காப்புக்காக போலீசார் விஜயகுமார் காலில் சுட்டதில் அவர் படுகாயம் அடைந்தார்.

இதனிடையே ரவுடி விஜயகுமார் கத்தியால் தாக்கியதில் மயிலாப்பூர் போலீஸ் நிலைய காவலர் தமிழரசனுக்கு கையில் வெட்டு காயம் ஏற்பட்டது. காயமடைந்த காவலர் தமிழரசன் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரவுடி விஜயகுமார் மீது 2 கொலை முயற்சி வழக்கு உள்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்