முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை.. கோவையில் நாளை மறுநாள் போக்குவரத்து மாற்றம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி கோவையில் நாளை மறுநாள் (09-10-2025) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.;
கோப்புப்படம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 9-ந் தேதி கோவை செல்கிறார். அவர், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதையொட்டி கோவை மாநகரில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.
இது தொடர்பாக கோவை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நீலாம்பூர், விமான நிலையம் வழியாக சேலம், ஈரோடு, திருப்பூர் செல்லும் பஸ்கள், ஆம்னி பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் நீலாம்பூரில் இருந்து நகருக்குள் வருவதற்கு தடை செய்யப்படுகிறது.
மாறாக நீலாம்பூரில் இருந்து எல் அண்டு டி பைபாஸ் வழியாக சிந்தாமணிபுதூர், ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர், ராமநாதபுரம், சுங்கம் வந்து வலதுபுறம் திரும்பி கே.ஆர்.ரோடு, அவினாசி சாலை, அண்ணா சிலை வழியாக காந்திபுரம் வந்தடைய வேண்டும்.
இதேபோல் நீலாம்பூரில் இருந்து விமான நிலையம் வழியாக நகருக்குள் வரும் இலகுரக வாகனங்கள் தொட்டிபாளையம் பிரிவில் வலதுபுறம் திரும்பி தொட்டிபாளையம், காளப்பட்டி நால்ரோடு, விளாங்குறிச்சி வழியாக நருக்குள் வரலாம். கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் இருந்து அவினாசி ரோடு, விமான நிலையம் வழியாக நகருக்கு வெளியே செல்லும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் லட்சுமி மில்லில் யுடர்ன் செய்து புலியகுளம், ராமநாதபுரம், சிங்காநல்லூர், எல் அண்டு டி பைபாஸ் வழியாக வெளியே செல்லலாம்.
காந்திபுரத்தில் இருந்து சத்தி சாலை வழியாக கணபதி, வாட்டர் டேங்க், விளாங்குறிச்சி, காளப்பட்டி நால்ரோடு வழியாக எல் அண்டு டி பைபாஸ் சென்று அடையலாம்.
நகரில் இருந்து அவினாசி ரோடு, விமான நிலையம் வழியாக செல்லும் இலகுரக வாகனங்கள் மற்றும் நகர பஸ்கள் டைடல் பார்க் வரை சென்று யுடர்ன் செய்து காமராஜர் ரோடு, சிங்காநல்லூர் வழியாக செல்ல வேண்டும்.
விளாங்குறிச்சி, தண்ணீர்பந்தல், காந்திமாநகர், கொடிசியா வழியாக செல்லும் கனரக வாகனங்கள் கொடிசியா வழியாக செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது. அதற்கு மாறாக காளப்பட்டி நால்ரோடு, தென்னம்பாளையம் வழியாக செல்ல அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் தண்ணீர் பந்தலில் இருந்து கொடிசியா வழியாக செல்லும் இலகுரக வாகனங்கள் காந்திமாநகர், பயனீயர் மில் வழியாக அவினாசி ரோட்டை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
உக்கடத்தில் இருந்து ஆத்துப்பாலம், சுந்தராபுரம் வழியாக பொள்ளாச்சி செல்லும் பஸ்கள், கனரக வாகனங்கள் மற்றும் இலகு ரக வாகனங்கள் அனைத்தும் குறிச்சி பிரிவில் இடதுபுறம் திரும்பி போத்தனூர் கடைவீதி, ரெயில்வே கல்யாண மண்டபம், செட்டிபாளையம் ரோடு வழியாக ஈச்சனாரி அடைந்து சர்வீஸ் சாலை வழியாக செல்லலாம்.
கனரக வாகனங்கள்
பொள்ளாச்சி சாலை வழியாக நகருக்குள் வரும் பஸ்கள், கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் அனைத்தும் கற்பகம் கல்லூரி சந்திப்பில் இருந்து மேம்பாலத்தின் மேல் வராமல் சர்வீஸ் சாலையில் வந்து ஈச்சனாரி கோவில் முன்பு யு டர்ன் செய்து, செட்டிப்பாளையம் ரோடு, ரெயில்வே கல்யாண மண்டபம், போத்தனூர், நஞ்சுண்டாபுரம் ரோடு, ராமநாதபுரம் வழியாக நகருக்குள் வரலாம்.
மதுக்கரை மார்க்கெட்டில் இருந்து வரும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் பிள்ளையார்புரம் சோதனைச்சாவடி, சுகுணாபுரம் வழியாக கோவைப்புதூர் பிரிவு, குனியமுத்தூர், புட்டுவிக்கி வழியாக நகருக்குள் வரலாம்.
மதுக்கரை மார்க்கெட்டில் இருந்து வரும் இலகுரக வாகனங்கள் மாச்சாம்பாளையம் பிரிவில் இருந்து இடதுபுறம் திரும்பி ஞானபுரம், பாலக்காடு ரோடு வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு கொடுத்து தங்களது பயண வழிகளில் எளிதாகவும், விரைவாகவும் செல்ல கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.