கோவை-தன்பாத் சிறப்பு ரெயில் 23-ந்தேதி முழுவதுமாக ரத்து

கோவை-தன்பாத் சிறப்பு ரெயில் 23-ந்தேதி முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.;

Update:2025-09-21 23:23 IST

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கோவையில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் நகருக்கு வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-03680) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்படுகிறது.

இந்த நிலையில், இணைப்பு ரெயில் ரத்து செய்யப்பட்டதால் கோவை-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்- 03680) 23-ந்தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

இதைபோல ஆலப்புழாவிலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-13352) 23-ந்தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்