கோவையில் சிகிச்சை பெற்று வந்த யானை உயிரிழப்பு

கோவை மருதமலை அடிவாரத்தில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த யானை உயிரிழந்தது.;

Update:2025-05-20 16:59 IST


கோவை பாரதியார் பல்கலைக்கழகம் பின்புறம் உள்ள வனப் பகுதியில் பெண் யானை உடல்நலக்குறைவால் சோர்வுடன் கடந்த 19-ந்தேதி நின்றது. இதை அறிந்த வனத்துறை அதிகாரிகள், கால்நடை மருத்துவர்கள் மூலம் அந்த யானையை காப்பாற்ற சிகிச்சை அளித்து வந்தனர். 

நேற்று 3-வது நாளாக வனக் கால்நடை மருத்துவ குழுவினர் மூலம் நரம்பு வழி சிகிச்சை மூலமாகவும், ஊசி மூலமாகவும் சிகிச்சை அளித்தனர். இதனால் யானையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. மேலும் மருத்துவர்களின் அறிவுரையின்படி யானைக்கு பசுந்தீவனம், பழங்கள், களி மற்றும் தண்ணீர் உணவாக கொடுக்கப்பட்டது. யானை நன்றாக உணவு எடுத்துக்கொண்டது மேலும் யானையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் உடல் நலக்குறைவால் கடந்த 4 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த யானை சிகிச்சை பலனளிக்காமல் தற்போது உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கும்கி யானை உதவியுடன் வனத்துறையினர் சிகிச்சை அளித்து வந்த நிலையில் யானை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்