தவெக உடன் காங்கிரஸ் மறைமுக கூட்டணி பேச்சுவார்த்தையா? - செல்வப்பெருந்தகை பதில்

இந்தியா கூட்டணியில் எந்த மாற்றமும் வராது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.;

Update:2025-09-24 02:22 IST

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் சீட்டுகள், தி.மு.க. கூட்டணியில் கேட்க வேண்டும் என கட்சியினர் தங்களுடைய ஆசையை சொல்கிறார்கள். இதனால் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்படாது. கட்சியினர் கருத்துகளை காங்கிரஸ் தலைமையிடம் தெரிவிப்பேன்.

ஆனால் முடிவு எடுப்பது காங்கிரஸ் தலைமையும் பொறுப்பாளர்களும்தான். தமிழக காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கட்சியினர் குறித்த கருத்துகளை விவாதிக்க உள்ளோம். தவெக உடன் கூட்டணி குறித்து காங்கிரஸ் கட்சி மறைமுகமாக எதுவும் பேசவில்லை. இதில் என்ன தேவை இருக்கிறது? இந்தியா கூட்டணியில் எந்த மாற்றமும் வராது. சுற்றுப்பயணத்தில் இருக்கும் நடிகர் விஜய் பேசுவதற்கு காவல்துறை அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் என்ன பேசுகிறார் என தெரியவரும்.

காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் அரசு உடனே அனுமதி தருவதில்லை. ஒவ்வொரு போராட்டத்திற்கும் போராடிதான் அனுமதி வாங்க வேண்டியுள்ளது. அதற்காக அரசு நெருக்கடி தருகிறது என்று சொல்ல முடியுமா? அவர்கள் வேலையை அவர்கள் செய்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்