நெல்லையில் கல்லூரி மாணவிகளுக்கு போலீஸ் துணை கமிஷனர் அறிவுரை
திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கான பாதுகாப்பு மற்றும் சமூக பொறுப்பு சம்பந்தமான திறன் மேம்பாட்டு பயிற்சி விழா நடைபெற்றது.;
திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற்ற மாணவிகளுக்கான பாதுகாப்பு மற்றும் சமூக பொறுப்பு சம்பந்தமான திறன் மேம்பாட்டு பயிற்சி விழாவில் சிறப்பு விருந்தினராக நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் (மேற்கு) பிரசண்ணகுமார் கலந்து கொண்டு பயிற்சி முகாமை தொடங்கி வைத்து மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார். இவ்விழாவில் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.