பேரிடர் மீட்பு மற்றும் தடுப்பு உபகரணங்கள்: திருநெல்வேலி எஸ்.பி. ஆய்வு
திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற காவலர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.;
தமிழக முதல்-அமைச்சர் உத்தரவுப்படி, வடகிழக்கு பருவமழை சம்பந்தமாக வெள்ள தடுப்பு மற்றும் மீட்பு நடவடிக்கை சம்பந்தமான முன்னேற்பாடு நடவடிக்கைகள், திருநெல்வேலி மாவட்ட காவல் துறையின் சார்பாக முழு வீச்சில் எடுக்கப்பட்டு வருகிறது.
திருநெல்வேலி மாவட்ட ஆயுதப் படையில், பேரிடர் மீட்பு மற்றும் தடுப்பு சாதனங்கள், உபகரணங்கள் ஆகியவற்றினை நேற்று மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற காவலர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மழை மற்றும் வெள்ளம் சம்பந்தமான தகவல்கள் குறித்து உரிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.