மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.;
சென்னை,
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை மேற்கொள்வதற்கு ஆரம்பம் முதலே தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக தி.மு.க. தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எதிர்ப்புகள் இருந்தபோதிலும் தேர்தல் கமிஷன் சிறப்பு திருத்த பணியை தொடங்கியது.
சிறப்பு திருத்த பணி என்கிற பெயரில் எந்தவொரு உண்மையான வாக்காளர்களின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விடக்கூடாது? என்பதில் தி.மு.க. உறுதியாக இருக்கிறது. அந்த அடிப்படையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி தொடர்பாக திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
காணொலி காட்சி மூலம் நடைபெறும் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தொகுதி பார்வையாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணி குறித்து முக்கிய முடிவுகள், கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.