20-ந்தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - துரைமுருகன் அறிவிப்பு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2026-01-13 21:46 IST

சென்னை,

முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது; 

”திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 20-01-2026 (செவ்வாய்கிழமை) மாலை 5.30 மணிக்கு திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது. அப்போது மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

Tags:    

மேலும் செய்திகள்