திமுகவை ஆட்சிக்கு வர விடக்கூடாது: அன்புமணி ராமதாஸ் பேச்சு

தமிழகத்தில் உள்ள அனைத்து பெற்றோரும் சிந்தித்து பார்க்க வேண்டும் அன்புமணி ராமதாஸ் கூறினார்;

Update:2026-01-09 10:29 IST

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணியில் பாமக இடம்பெற்றுள்ளது. அதன்படி, எடப்பாடி பழனிசாமியை நேற்று சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிமுக - பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார்.

இந்நிலையில், செங்கல்பட்டில் நேற்று இரவு பாமக கூட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற அன்புமணி ராமதாஸ் பேசியதாவது,

பொங்கலுக்கு ரூ. 3 ஆயிரம் கொடுத்துவிட்டால் ஊழலை மக்கள் மறந்து விடுவார்கள் என்று திமுக நினைக்கிறது. அதிமுக கூட்டணியில் நாம் இணைந்த உடன் தோற்றுவிடுவோம் என்று திமுக முடிவு செய்துவிட்டது.

வரும் சட்டசபை தேர்தல் தமிழ்நாட்டிற்கும், உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கும் முக்கியமான தேர்தல். தமிழகத்தில் உள்ள அனைத்து பெற்றோரும் சிந்தித்து பார்க்க வேண்டும். உங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளின் எதிர்காலம் திமுக ஆட்சியில் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. திமுகவை ஆட்சிக்கு வரவிடக்கூடாது. விவசாயிகளின் காலை தொட்டு கேட்கிறேன் தயவு செய்து திமுகவுக்கு யாரும் ஓட்டு போடாதீர்கள்’ என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்