மதுரை விமான நிலையத்தில் ரூ.8 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்: 2 பேர் கைது

இலங்கை கொழும்புவில் இருந்து மதுரை வந்த விமானத்தில் போதைப்பொருள் கடத்தப்பட்டு வந்துள்ளதாக சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.;

Update:2025-10-30 11:12 IST

இலங்கை கொழும்புவில் இருந்து மதுரை வந்த விமானத்தில் போதைப்பொருள் கடத்தப்பட்டு வந்துள்ளதாக சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கொழும்பு விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக சோதனையிட்டனர்.

தஞ்சையைச் சேர்ந்த முகமதுமைதீன் (வயது 26), சென்னையை சேர்ந்த சாகுல்ஹமீது(50) ஆகியோர் மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் 2 பேரையும் தனியாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். மேலும் அவர்கள் கொண்டு வந்த உடைமைகளையும் சோதனை செய்தனர்.

அப்போது 8 கிலோ ‘ஹைரோ போனிக்’ என்ற உயர்ரக போதைப்பொருளை மறைத்து கடத்தி கொண்டுவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் இருந்த போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். அந்த 2 பேரையும் கைது செய்தனர். தாய்லாந்தில் இருந்து இந்த போதைப்பொருளை வாங்கி அதனை இலங்கை வழியாக மதுரைக்கு கடத்தி வந்ததாகவும், அதன் இந்திய மதிப்பு ரூ.8 கோடி இருக்கும் எனவும் அதிகாரிகள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்