அமைச்சர் துரைமுருகனிடம் உடல்நலம் விசாரித்த எடப்பாடி பழனிசாமி
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி துரைமுருகனை தனியாக சந்தித்து உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.;
சென்னை,
அரசியலில் எதிரிகளாக இருந்தாலும் மனித நேயத்தை வெளிப்படுத்துவதில் அரசியல்வாதிகள் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல. அந்த வகையில் சட்டசபையில் நிகழ்வு ஒன்று நடந்தது. சமீபத்தில் மூத்த அமைச்சர் துரைமுருகன் சற்று உடல் நலன் பாதிக்கப்பட்டு இருந்தார். பின்னர் குணமான நிலையில் அவர் சட்டசபைக்கு வந்திருந்தார்.சட்டசபை வளாகத்தில் அவரை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனியாக சந்தித்து உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். சட்டசபைக்குள் எதிர்க்கருத்துகளை கூறி விவாதித்தாலும் அவைக்கு வெளியே அவர்கள் நட்பு பாராட்டியது பாராட்டுக்குரியதாக அமைந்திருந்தது.