எடப்பாடியின் கனவு வெறும் கனவாகத்தான் முடியும்:கனிமொழி எம்.பி. பேட்டி

அ.தி.மு.க. கூட்டணி 210 தொகுதியில் வெல்லும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதை கனிமொழி விமர்சித்துள்ளார்.;

Update:2025-09-08 23:56 IST

சென்னை,

அ.தி.மு.க. கூட்டணி 210 தொகுதியில் வெல்லும் என்று எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்து கனிமொழி எம்.பி. கூறும் போது, ‘கனவுகள் எல்லாம் மெய்ப்படுவதில்லை. நிச்சயமாக எடப்பாடி பழனிசாமியின் இந்த கனவு வெறும் கனவாகத்தான் முடியும்’ என்றார்.

மேலும் அவர் கூறும் போது, ‘துணை ஜனாதிபதி தேர்தலை நடத்துவது மிகவும் முக்கியம். ஏனென்றால் இது ஜனநாயக செயல்முறையின் ஒரு பகுதியாகும். இது ஒரு சித்தாந்த போராட்டம். இது ஜனநாயகத்தின் போராட்டம்’ என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்