தன்னை கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த விவசாயி

தன்னை கடித்த பாம்புடன் விவசாயி சிகிச்சைக்கு வந்தது ஆஸ்பத்திரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.;

Update:2025-12-11 00:18 IST

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நடுவப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 42). விவசாயியான இவர் தனது தோட்டத்தில் மாடுகள் மேய்த்தார். வரப்பில் அமர்ந்து இருந்தபோது ஒரு பாம்பு தங்கராஜை கடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அந்த பாம்பை அடித்துக்கொன்று ஒரு பாட்டிலில் அடைத்து எடுத்துக்கொண்டு. சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தார்.

பின்னர் அங்கிருந்த டாக்டரிடம் அந்த பாம்பை காண்பித்து தனக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறினார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். தன்னை கடித்த பாம்புடன் விவசாயி சிகிச்சைக்கு வந்தது ஆஸ்பத்திரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Tags:    

மேலும் செய்திகள்