பூட்டிய வீட்டுக்குள் காதலனுடன் தனிமையில் இருந்த மகளை பிடித்து போலீசில் ஒப்படைத்த தந்தை

கொத்தனாரின் மனைவி இவரை விட்டு பிரிந்து வேறு ஒருவருடன் சென்று விட்டார்.;

Update:2025-11-12 06:50 IST

குமரி,

குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கோணங்காடு பகுதியை சேர்ந்த கொத்தனாருக்கு 17 வயதில் ஒரு மகளும், ஒரு மகனும் உண்டு. மகள் பிளஸ்-2 படித்து வருகிறார். கொத்தனாரின் மனைவி இவரை விட்டு பிரிந்து வேறு ஒருவருடன் சென்று விட்டார். இதனால் கொத்தனார் தனது மகள் மற்றும் மகனுடன் தனியாக வசித்து வருகிறார்.

அத்துடன் தற்போது கேரளா மாநிலத்தில் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார். கொத்தனாரின் மகளும், ஒரு வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இதை அறிந்த கொத்தனார் மகளை கண்டித்து வந்தார். ஆனால், மகள் தந்தையின் பேச்சை கண்டுகொள்ளவில்லை. இந்தநிலையில் நேற்று கொத்தனார் கேரளாவில் இருந்து ஊருக்கு வந்தார்.

அப்போது வீடு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. அவரது மகள், தனது காதலனை வீட்டிற்கு வரவழைத்து தனிமையில் காதல் லீலையில் ஈடுபட்டு கொண்டு இருந்துள்ளார். இதைகண்டு கொத்தனார் மிகவும் அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து வீட்டை வெளிப்புறமாக பூட்டி விட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து மகளின் காதல் லீலைகளை கூறினார். அங்கு வந்த பொதுமக்கள் வீட்டை சுற்றி வளைத்து இருவரையும் பிடித்தனர்.

தொடர்ந்து காதலனிடம் விசாரணை நடத்திய போது அவர் குளச்சல் அருகே உள்ள கொத்தனார் விளையை சேர்ந்தவர் என்பதும் ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருவதும் தெரிய வந்தது. அத்துடன் விடுமுறை நாட்களில் குளச்சல் துறைமுகத்தில் வேலைக்கு சென்று வந்தார். அதில் கிடைக்கும் பணத்தால் மாணவிக்கு தேவையான பொருட்கள் மற்றும் உணவு வகைகளை வாங்கி கொடுப்பதாக கூறினார்.

இதையடுத்து இருவரையும் குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் மாணவனின் பொற்றோருக்கு தகவல் கொடுத்து போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர். தொடர்ந்து மாணவனின் செயலை பெற்றோரிடம் கூறி அவரை கண்டித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்