தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி மீனவர் பலி

தூத்துக்குடி லயன்ஸ் டவுனை சேர்ந்த ஒரு வாலிபர் மீன்பிடித் தொழில் செய்து வந்தார்.;

Update:2025-10-12 21:33 IST

தூத்துக்குடி லயன்ஸ் டவுனை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் கபில் (வயது 25), மீன்பிடித் தொழில் செய்து வந்தார். இவருக்கு அனிதா என்ற மனைவியும், 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். கடந்த 7ம் தேதி மீன்பிடித் துறைமுகத்தில் நின்றுகொண்டிருந்த கபில், அங்கிருந்த மின்மாற்றியை எதிர்பாராமல் தொட்டுள்ளார்.

அப்போது மின்சாரம் தாக்கியதில் பலத்த காயமுற்ற அவர், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவர் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்