அ.தி.மு.க. கூட்டத்தை தொடர்ந்து த.வெ.க. கூட்டத்திலும் நுழைந்த ஆம்புலன்ஸ்
விஜய் பேச தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஒரு ஆம்புலன்ஸ் ஒன்று அந்த கூட்டத்திற்குள் நுழைந்தது.;
திருச்சி,
விக்கிரவாண்டி, மதுரை மாநாட்டினை தொடர்ந்து, திருச்சியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று பிரசாரத்தை தொடங்கியுனார். காலை விமான நிலையத்தில் இருந்து பிரசார வாகனத்தில் புறப்பட்ட விஜய் சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகு காந்தி மார்க்கெட் மரக்கடை வந்தடைந்தார். அப்பகுதியில் தவெக தொண்டர்கள் கடலென திரண்டு இருந்ததால் மரக்கடை செல்வதற்கு கால தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், மரக்கடை அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலை முன்பு வாகனத்தின் மேல் நின்றபடி விஜய் தொண்டர்கள் மத்தியில் பேச தொடங்கினார். விஜய் பேச தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஒரு ஆம்புலன்ஸ் ஒன்று அந்த கூட்டத்திற்குள் நுழைந்தது. அதனை பார்த்த தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் ஆம்புலன்ஸுக்கு வழி விட்ட வீடியோ பாராட்டைப் பெற்று வருகிறது.
முன்னதாக, அதிமுக பிரசாரத்தில் ஆளில்லா ஆம்புலன்ஸ் அனுப்பி இடையூறு செய்வதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி இருந்தார். அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே ஆம்புலன்சை வைத்து கடுமையான விமர்சனங்கள் நடந்து வருகின்றன
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் கூட்டத்தை தொடர்ந்து, தவெக தலைவர் விஜயின் கூட்டத்திலும் ஆம்புலன்ஸ் நுழைந்தது பெரும் பேசுபொருளாகியுள்ளது.