தமிழக அரசின் 2 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல்

தமிழக அரசின் 2 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.;

Update:2025-04-22 15:29 IST

சென்னை,

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 2 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்த சட்ட மசோதாவுக்கும், தமிழ்நாடு பொது கட்டிட உரிமை திருத்த சட்ட மசோதாவுக்கும் அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஏற்கனவே, 10 சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காத நிலையில், சுப்ரீம் கோர்ட்டு தனது தனி அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் அளித்து, அது தமிழக அரசிதழிலும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில்தான், தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 2 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்