மகளிர் உரிமைத் தொகை பெற உதவுங்கள்: திமுக நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

போடிநாயக்கனூர், சாத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.;

Update:2025-11-13 13:53 IST

சென்னை,

திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் 'உடன் பிறப்பே வா' என்ற தலைப்பில் சட்டசபை தொகுதி வாரியாக தி.மு.க. நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

அதன்படி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் 'உடன் பிறப்பே வா' நிகழ்ச்சியில் இன்று, போடிநாயக்கனூர், சாத்தூர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை ஒன் டூ ஒன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின்போது தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு, தேர்தல் பணி உள்ளிட்டவை குறித்து அவர்களிடம் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

அப்போது, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறாதவர்களில் தகுதியானவர்கள் இருப்பின் அவர்கள் உரிமைத்தொகை பெறும் வகையில் கட்சியினர் உதவிட வேண்டும் என்று கட்சியினரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.

போடி தொகுதியை இம்முறை திமுக கூட்டணி வெல்ல வேண்டும்- தொகுதி நிர்வாகிகளிடம் முதலமைச்சர் கண்டிப்புடன் கூறியுள்ளார். மேலும், அரசின் சாதனைகளை தொகுதி முழுக்கவும் விளம்பரப்படுத்தவும் நிர்வாகிகளுக்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்