கரூர் சென்ற ஹேமமாலினியின் கார் விபத்து

கோவையில் இருந்து கரூர் சென்ற பாஜக எம்.பி ஹேமா மாலினி கார் விபத்தில் சிக்கியது;

Update:2025-09-30 12:54 IST

கரூர்,

தவெக தலைவர் விஜய் கடந்த 27 ஆம் தேதி நாமக்கல்லைத் தொடர்ந்து கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கரூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே, கரூர் துயர சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஹேமா மாலினி எம்.பி தலைமையிலான குழுவினரை தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்துள்ளது. எம்.பி ஹேமா மாலினி தலைமையிலான குழு இன்று கோவை வந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்தது. அப்போது, கரூர் சம்பவம் குறித்து 8 பேர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தி பாஜக தேசியத் தலைவர் நட்டாவுக்கு அறிக்கை அளிக்க இருப்பதாக அவர் கூறினார்.

இதையடுத்து கோவையில் இருந்து கரூர் கிளம்பிச் சென்ற தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.கள் குழுவினரின் கார்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டன. இதில் எம்.பி ஹேமா மாலினி பயணம் செய்த காரின் முன்பகுதி சேதமடைந்தது. இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படாத நிலையில், ஹேமா மாலினி அதே காரில் புறப்பட்டு கரூர் சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்