சென்னை உட்பட 2 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
மோந்தா புயல் காரணமாக சென்னையில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது.;
சென்னை,
மோந்தா புயல் காரணமாக சென்னையில் இன்று தொடர் மழை பெய்து வருகிறது. நாளை கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, திருவள்ளூர் மாவட்டத்திலும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மோந்தா புயல் நாளை ஆந்திராவின் காக்கி நாடா அருகே கரையைக் கடக்க உள்ளது. இந்த புயலின் தாக்கத்தால் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.