ஐ.பி.எல். கிரிக்கெட்; கள்ளச் சந்தையில் டிக்கெட் விற்பனை செய்த 25 பேர் கைது

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டை கள்ளச் சந்தையில் விற்பனை செய்த 25 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.;

Update:2025-03-29 17:33 IST

சென்னை,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த தொடரின் 8-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இடையிலான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்ட நிலையில், ஐ.பி.எல். டிக்கெட்டுகள் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இது குறித்து திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையின் அடிப்படையில், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டை கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 25 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 48 டிக்கெட்டுகள் மற்றும் 52 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்