பா.ஜ.க.வை பார்த்து த.வெ.க தலைவர் விஜய்க்கு பயமா? - நயினார் நாகேந்திரன்

தவெக தலைவர் விஜய் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க.வும், பா.ஜ.க.வும் மறைமுக கூட்டாளிகள் என்று விமர்சனம் செய்துள்ளார்.;

Update:2025-04-14 17:51 IST

மத்திய அரசு கொண்டுவந்த வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் விமர்சனம் செய்துள்ளார். மேலும், "ஜனநாயகத்திற்கு விரோதமான வக்பு சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசு இதனைச் செய்யாத பட்சத்தில், இஸ்லாமிய சகோதரர்களோடு இணைந்து அவர்களின் வக்பு உரிமை சட்டப் போராட்டத்தில் தமிழக வெற்றிக் கழகமும் பங்கேற்றுப் போராடும்" என்று விஜய் தெரிவித்திருந்தார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து தவெக சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. அதேவேளை, தவெக தலைவர் விஜய் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க.வும், பா.ஜ.க.வும் மறைமுக கூட்டாளிகள் என்று விமர்சனம் செய்துள்ளார்.

இந்நிலையில், த.வெ.க. தலைவர் விஜய் தொடர்ந்து அறிக்கை மூலம் பா.ஜ.க.வை விமர்சனம் செய்துவருவது குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் இன்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அந்த கேள்விக்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன் கூறுகையில், த.வெ.க. தலைவர் விஜய்க்கு பா.ஜ.க.வை பார்த்து பயமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என தெரியவில்லை' என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்