கரூர் கூட்ட நெரிசல்: ஐகோர்ட்டு மதுரை கிளையில் நாளை விசாரணை

கரூரில் நேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார்.;

Update:2025-09-28 13:02 IST

கரூரில் நேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் இரவு 7 மணிக்குமேல் பிரசாரம் நடைபெற்றது. பிரசாரத்தின்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 17 பெண்கள், 12 ஆண்கள் என மொத்தம் 39 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனிடையே, சென்னை ஐகோர்ட்டு நீதிபதி தண்டபானியின் வீட்டிற்கு இன்று தமிழக வெற்றிக் கழக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் சென்றனர். கரூர் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் திட்டமிட சதி இது குறித்து சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வுக்குழு மூலம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிபதியிடம் முறையிட்டனர்.

இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக தவெகவின் முறையீடு ஐகோர்ட்டு மதுரை கிளையில் நாளை விசாரணை நடைபெறும் என்று நீதிபதி கூறியுள்ளார். நாளை மதியம் 2.15 மணிக்கு நாளை தொடங்குகிறது.  

Tags:    

மேலும் செய்திகள்