ஆனைமலையாறு, நல்லாறு பேச்சுவார்த்தையில் கேரளா அரசு மெத்தனம்: அமைச்சர் துரைமுருகன் பதில்

ஆனைமலையாறு, நல்லாறு உள்ளிட்ட 2 திட்டங்கள் குறித்து கேரளா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமா என்று கொங்கு ஈஸ்வரன் கேள்வி எழுப்பினார்.;

Update:2025-04-23 12:47 IST

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது கேள்வி எழுப்பிய கொங்கு ஈஸ்வரன், ஆனைமலையாறு, நல்லாறு உள்ளிட்ட 2 திட்டங்கள் குறித்து கேரளா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமா என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசியபோது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், "பரம்பிகுளம் ஆழியாறு ஒப்பந்தத்தின்படி, ஆனைமலையாறு நல்லாற்றில் இருந்து தண்ணீரை திருப்பி கொள்ளலாம். கீழே கேரளா அரசு அணை கட்டி உள்ளது. இந்த அணை கட்டி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இது தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று கேரளா அரசுக்கு எத்தனையோ முறை கடிதம் எழுதி உள்ளோம். ஆனால் கேரளா அரசு மெத்தனமாக உள்ளது. மீண்டும் நேரில் சந்திக்கலாம் என்று முடிவு செய்து உள்ளோம்" என்று தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்