"பிரகாசமான எதிர்காலத்திற்காக ஒன்றாக அணிவகுப்போம்" - விஜய்

தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் விஜய் நன்றி தெரிவித்திருக்கிறார்.;

Update:2025-06-23 09:53 IST

சென்னை,

தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் நேற்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்களும் , அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் விஜய் நன்றி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

''பிறந்தநாள் வாழ்த்து கூறிய அரசியல் தலைவர்கள், திரைப்படம் மற்றும் ஊடகத் துறை நண்பர்கள், நலம் விரும்பிகள் , என் நெஞ்சில் குடி இருக்கும் உலகம் முழுவதிலும் உள்ள தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

உங்கள் ஆதரவு மக்களுக்கு சேவை செய்வதற்கான எனது பயணத்தை ஊக்குவிக்கிறது. பிரகாசமான எதிர்காலத்திற்காக ஒன்றாக அணிவகுப்போம்" இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்