மதுரை: கொலை வழக்கு குற்றவாளிகள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை
மதுரை மாநகரில் ஆடலுடன் பாடல் நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட முன்பகை காரணமாக பாஷித்அஹமது கொலை செய்யப்பட்டார்.;
மதுரை மாநகர், திருநகர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட ஒனக்கல் சௌராஸ்டிரா சொசைட்டிக்கு பின்புறம் சௌபாக்யா நகரைச் சேர்ந்த அப்துல்அஜீஸ் மகன் பாஷித்அஹமது (வயது 30) என்பவரை அந்த பகுதியில் நடந்த ஆடலுடன் பாடல் நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட முன்பகை காரணமாக, மதுரை விளாச்சேரியை சேர்ந்த ரவி மகன் ராஜேஷ் (30) மற்றும் சந்திரன் மகன் விஸ்வா (18) ஆகியோர் சேர்ந்து கொலை செய்துள்ளனர். இதுசம்பந்தமாக திருநகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகள் 2 பேரும் கைது செய்யப்பட்டு, குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கு விசாரணை மதுரை மாவட்ட 5-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று (28.04.2025) இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவற்று நீதிபதி ஜோஸ்வாராய் தீர்ப்பு வழங்கினார். அதில் அவர் குற்றவாளிகள் ராஜேஷ், விஷ்வா ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட திருநகர காவல் துறையினரை மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் பாராட்டினார்.