பராமரிப்பு பணிகள்: பல்வேறு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பகுதி நேர ரத்து

மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், பல்வேறு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.;

Update:2025-07-03 07:21 IST

கோப்புப்படம்

சென்னை,

மதுரை கோட்டத்தில் பல்வேறு பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

* கோவையில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.16322), இன்று (வியாழக்கிழமை) முதல் வரும் 15-ந்தேதி வரையில் திண்டுக்கல்-நாகர்கோவில் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, திண்டுக்கல்லில் நிறுத்தப்படும்.

* திருச்சியில் இருந்து காலை 7.05 மணிக்கு புறப்பட்டு ராமேசுவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16849), வரும் 7,8,9,10,11,14,15 ஆகிய தேதிகளில் மானாமதுரை-ராமேசுவரம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, மானாமதுரையில் நிறுத்தப்படும்.

* ராமேசுவரத்தில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16850), வரும் 7,8,9,10,11,14,15 ஆகிய தேதிகளில் ராமேசுவரம்-மானாமதுரை இடையே பகுதி நேரம் ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் ராமேசுவரத்தில் இருந்து புறப்படுவதற்கு மாற்றாக மானாமதுரையில் இருந்து காலை 6.55 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லும்.

மாற்றுப்பாதை

* மயிலாடுதுறையில் இருந்து வரும் 6,9,13 ஆகிய தேதிகளில் மதியம் 12.10 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16847), மணப்பாறை, வையம்பட்டி, வடமதுரை, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி ஆகிய பகுதி வழியாக செல்லாது. அதற்கு மாற்றாக திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் ஆகிய மாற்றுப்பாதை வழியாக செல்லும். கூடுதலாக புதுக்கோட்டை, தேவகோட்டை சாலை, சிவகங்கை, அருப்புக்கோட்டை ஆகிய நிறுத்தங்கள் வழங்கப்பட்டு உள்ளது.

* செங்கோட்டையில் இருந்து வரும் 4,5,7,8,9,11,12,14,15 ஆகிய தேதிகளில் காலை 6.55 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16848), கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ஆகிய பகுதி வழியாக செல்லாது. அதற்கு மாற்றாக விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக செல்லும். கூடுதலாக அருப்புக்கோட்டை, சிவகங்கை ஆகிய நிறுத்தங்கள் வழங்கப்பட்டு உள்ளது.

* கன்னியாகுமரியில் இருந்து வரும் 5,12 ஆகிய தேதிகளில் காலை 5.50 மணிக்கு புறப்பட்டு ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12666), மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் ஆகிய பகுதி வழியாக செல்லாது. அதற்கு மாற்றாக, விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக செல்லும். கூடுதலாக அருப்புக்கோட்டை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய நிறுத்தங்கள் வழங்கப்பட்டு உள்ளது.

* கன்னியாகுமரியில் இருந்து வரும் 4,11 ஆகிய தேதிகளில் காலை 5.15 மணிக்கு புறப்பட்டு ஐதராபாத் செல்லும் சிறப்பு ரெயில் (07229), மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் ஆகிய பகுதி வழியாக செல்லாது. அதற்கு மாற்றாக, விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக செல்லும். கூடுதலாக அருப்புக்கோட்டை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய நிறுத்தங்கள் வழங்கப்பட்டு உள்ளது.

* நாகர்கோவிலில் இருந்து வரும் 20-ந்தேதி காலை 6.15 மணிக்கு புறப்பட்டு மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16352), மதுரை, திண்டுக்கல் ஆகிய பகுதி வழியாக செல்லாது. அதற்கு மாற்றாக, விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக செல்லும். கூடுதலாக அருப்புக்கோட்டை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய நிறுத்தங்கள் வழங்கப்பட்டு உள்ளது.

புறப்படும் நேரம் மாற்றம்

* மதுரையில் இருந்து காலை 10.40 மணிக்கு புற்பபட்டு தெலுங்கானா மாநிலம் காச்சிகுடா செல்லும் சிறப்பு ரெயில் (07192), அதற்கு மாற்றாக வரும் 9-ந்தேதி மதுரையில் இருந்து மதியம் 12 மணிக்கு (1 மணி நேரம் 20 நிமிடம் தாமதம்) புறப்பட்டு காச்சிக்குடா செல்லும்.

* ராமேசுவரத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்பட்டு தெலுங்கானா மாநிலம் சார்லபள்ளி செல்லும் சிறப்பு ரெயில் (07696), அதற்கு மாற்றாக வரும் 4,11 ஆகிய தேதிகளில் ராமேசுவரத்தில் இருந்து இரவு 7 மணிக்கு (9 மணி நேரம் 50 நிமிடம் தாமதம்) புறப்பட்டு சார்லபள்ளி செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்