களக்காட்டில் வாலிபரின் பைக்கை தீ வைத்து சேதப்படுத்தியவர் கைது

களக்காடு பகுதியைச் சேர்ந்த வாலிபருக்கும் அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு நபருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.;

Update:2025-07-02 20:18 IST

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு, வடக்கு மீனவன்குளத்தைச் சேர்ந்த சுரேஷ்கோபி (வயது 29) என்பவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த இசக்கிராஜ்(49) என்பவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. தற்போது, சுரேஷ்கோபி சுத்தமல்லியில் வசித்து வரும் நிலையில், நேற்று தனது சொந்த ஊரான வடக்கு மீனவன்குளத்திற்கு பைக்கில் வந்திருந்தார். அதை அறிந்த இசக்கிராஜ், முன் விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு, வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த சுரேஷ்கோபியின் பைக்கை தீயிட்டு எரித்து சேதப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து சுரேஷ்கோபி களக்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இசக்கிராஜை நேற்று முன்தினம் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்தார். 

Tags:    

மேலும் செய்திகள்